மம்தா பேனர்ஜி பேச்சை நம்பாதீர்கள்: அமித் ஷா எச்சரிக்கை

  அபிநயா   | Last Modified : 04 Oct, 2019 01:57 pm
its-totally-unwanted-to-believe-mamata-s-views-regarding-nrc-amit-shah-warns-indian-people

தேசிய குடியுரிமை பதிவேடு குறித்து அகதிகளாக இந்தியாவில் வசித்து வரும் இந்துக்களிடையே பீதியை கிளப்பும் வகையில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பேனர்ஜி பொய் சொல்லி வருவதாகவும், அவர் சொல்வதை நம்ப வேண்டாம் எனவும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி இந்து அகதிகள், இந்தியாவை விட்டு வெளியேற்றப்படும் நிலை வரும் என மத்திய அரசை தாக்கி கருத்து தெரிவித்திருந்தார். 

இவரின் இந்த கருத்துக்கு எதிராக, கொல்கத்தா நகரில் நடைபெற்ற, தேசிய குடியுரிமைப் பதிவேடு குறித்த பொது விழிப்புணர்வு கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் ஒருவரையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மேலும், தேசிய குடியுரிமை பதிவேடு குறித்து அகதிகளாக இந்தியாவில் வசித்து வரும் இந்துக்களிடையே பீதியை கிளப்பும் வகையில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பேனர்ஜி கருத்துக்கள் தெரிவித்து வருகிறார். நான் வாக்கு கொடுக்கிறேன். அகதிகளையும் குடிமக்களாக பார்க்கும் நாடே இந்தியா. இங்கே வசிக்கும் எந்த ஒரு மதத்திற்கு எதிராகவும் மத்திய அரசு செயல்படாது" என மம்தா பேனர்ஜியின் கருத்துக்கு பதிலளித்துள்ளார் அமித் ஷா.

 

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close