காஷ்மீர் தலைவர்களும் கூடிய விரைவில் விடுவிக்கப்படுவார்கள் ஃபரூக் கான் உறுதி!!

  அபிநயா   | Last Modified : 04 Oct, 2019 06:43 pm
kashmir-leaders-will-also-be-released-from-house-arrest-soon-farooq-khan

ஜம்மு காஷ்மீரில், உள்ளாட்சித்தேர்தல் நடக்கவிருப்பதை தொடர்ந்து, ஜம்முவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், காஷ்மீர் தலைவர்களும் கூடிய விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என ஃபரூக் கான் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து, பொது பாதுகாப்பிற்காகவும், சட்ட ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், பல தலைவர்களை வீட்டுக்காவலில் வைக்கும்படி மத்திய அரசு உத்திரவு பிறப்பித்திருந்தது. இதனடிப்படையில், 50 நாட்களுக்கும் மேலாக,  ஃபரூக் அப்துல்லா, அவரது மகன் ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, சௌத்ரி லால் சிங், ராமன் பல்லா, ஃபிர்டஸ் தாக், சுர்ஜித் சிங் ஸ்லாத்தியா, அப்துல் மஜீத் வானி, ஹர்ஷ் தேவ் சிங் உட்பட பல தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், வரும் அக்டோபர் 24 ஆம் தேதி உள்ளாட்சித்தேர்தல் நடக்கவிருப்பதால், ஜம்முவில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து, காஷ்மீரின் தலைவர்களும் விடுவிக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு, ஆளுநர் சத்யபால் மாலிக்கின் ஆலோசகர் ஃபரூக் கான் பதிலளித்துள்ளார். "ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து, பொது பாதுகாப்பிற்காக பல தலைவர்களை வீட்டுக்காவலில் வைக்கும் சூழல் உருவாகியது. தற்போது நிலைமை சீரடைந்து வருவதால், ஜம்முவை போல் காஷ்மீரின் தலைவர்களும், ஒவ்வோருவராக விடுவிக்கப்படுவார்கள்" என அவர் கூறியுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close