எய்ம்ஸ், பாண்டிச்சேரி ஜிப்மர் ஆகியனவும் இனி நீட் தேர்வு எழுதியவர்களைத்தான் அனுமதிக்க வேண்டும்: ஹர்ஷ் வர்தன்

  அபிநயா   | Last Modified : 05 Oct, 2019 06:27 pm
admission-to-mbbs-courses-in-aiims-jipmer-to-be-held-through-neet-harsh-vardhan

எய்ம்ஸ் மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆகியனவும் இனி நீட் தேர்வு எழுதியவர்களைத்தான் மருத்துவ படிப்புக்கு அனுமதிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில், இனி அனைத்து கல்லூரிகளையும் போல, எய்ம்ஸ் மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆகியனவும் நீட் தேர்வு எழுதியவர்களைத்தான் அனுமதிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2020 இன் கீழ், எய்ம்ஸ் மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆகியனவும், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை "நீட்" எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவு சோதனை மூலம் தான் மேற் கொள்ள வேண்டும். மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் வருவதால், இதுவரை இவை இரண்டும் தங்களுக்கென தனி தேர்வு முறையை பின்பற்றி வந்தன. மாணவர்களுக்கு பொதுவான ஒரு தரம் அமைக்கவே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மருத்துவத்துறையில் மேற் படிக்க விரும்பும் மாணவர்களுக்காக "நெக்ஸ்ட்" எனப்படும் தேர்வு முறையும், தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2020 இன் கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.உயர்கல்விக்காக மாணவர்கள் தனித்தனியே தேர்வு எழுத வேண்டிய அவசியம் இனி இருக்காது" என அவர் கூறியுள்ளார்.

மேலும், நீட் தேர்வு மூலம் மருத்துவ படிப்புக்கு சேர்க்கப்படாத மாணவர்களின் தகுதி சான்றிதழ், மெடிகல் கவுன்சில் ஆப் இண்டியா எனப்படும் இந்திய மருத்துவக்குழுவினரால் ரத்து செய்யப்படும் எனவும், மத்திய அரசின் எந்த ஒரு மானியமும் அம்மாணவர்களுக்கு வழங்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2020, கடந்த செப் 2., ஆம் தேதி அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இதன் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பணி வரும் அக்டோபர் 14 ஆம் தேதி தொடங்கவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close