யுத்தகளத்தில் வீரமரணமடைபவர்களின் வாரிசுகளுக்கான இழப்புத்தொகையை நான்கு மடங்காக உயர்த்திட்ட ராஜ்நாத் சிங்!!

  அபிநயா   | Last Modified : 05 Oct, 2019 10:00 pm
defence-minister-rajnath-singh-approves-four-fold-increase-to-families-of-battle-casualties

யுத்தகளத்தில் வீரமரணம் அடையும் வீரர்களின் குடும்பத்தார்க்கு வழங்கி வரும் இழப்புத்தொகையை, நான்கு மடங்காக உயர்த்தி வழங்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்க, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முடிவு செய்துள்ளார்.

யுத்தகளத்தில் வீரமரணம் அடையும் வீரர்கள் மற்றும் படுகாயம் அடையும் வீரர்களின் குடும்பத்தார்க்கு, மத்திய அரசு ரூ.2 லட்சம் இழப்புத்தொகையாக வழங்கி வந்த நிலையில், தற்போது, அந்த தொகையை நான்கு மடங்காக உயர்த்தி, ரூ.8 லட்சமாக வழங்க, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முடிவு செய்துள்ளதாக, இன்று (சனிக்கிழமை), மத்திய பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், சியாச்சின் சிகரத்தில் 10 வீரர்கள் மரணமடைந்ததையடுத்து, யுத்தகளத்தில் வீரமரணம் அடையும் வீரர்களின் குடும்பத்தார்க்கு பண உதவி செய்ய பலரும் முன் வந்ததை தொடர்ந்து, மத்திய அரசு, ராணுவ போர் விபத்துக்கள் நல நிதியமைப்பை உருவாக்கியது. மேலும், வீரர்களின் குடும்பத்தார்க்கு உதவ நினைப்பவர்களுக்காக, சிண்டிகேட் வங்கியின், சௌத் ப்ளாக் கிளையில்,  90552010165915 என்ற வங்கி கணக்கையும் தொடங்கியது. இந்த நிதியமைப்பு, தர்மகாரியங்களை வரையறுக்கும் சட்டம், 1890 இன் கீழ் இயங்கப்படுகிறது.

மேலும், ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அமல்படுத்திய "பாரத் கீ வீர்" நிதியுதவியும் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close