ஜம்மு காஷ்மீரில் அத்துமீறி நுழையும் பயங்கரவாதிகள்

  அபிநயா   | Last Modified : 07 Oct, 2019 09:55 am
200-to-300-terrorists-active-in-jammu-and-kashmir-pakistan-trying-to-push-even-more

ஜம்மு காஷ்மீர் பகுதியில், 200 முதல் 300 பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைய முயற்சித்து வருவதாக, இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் பகுதியில், பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்ள முயன்று வரும் நிலையில், தற்போது, காஷ்மீரை ஒட்டிய பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் 200 முதல் 300 பயங்கரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரி தில்பாக் சிங் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஜம்மு காஷ்மீர் பகுதியில் அத்துமீறி நுழைவதும், தாக்குதல்களில் ஈடுபடுவதுமாக இருந்து வரும் நிலையில், தற்போது அங்கே 200 முதல் 300 பயங்கரவாதிகளின் நடமாட்டம் தென்படுகிறது. நாளுக்கு நாள் இவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்த வண்ணம் இருப்பதை தொடர்ந்து, இந்திய ராணுவம்  மறு தாக்குதல்கள் மேற்கொண்டு பல ஊடுருவல் காரர்களை சுட்டுத்தள்ளி வருகிறது. கடந்த செப் 29., ஆம் தேதியன்று பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் இரண்டு பேர், இந்திய ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த 5 ஆண்டுகளை விட, பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளின் அத்துமீறல்கள், இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலேயே அதிகரித்திருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close