ராமஜன்ம பூமியின் மீது எழுப்பப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் கீழ் ஆலயம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டடைந்தோம்: தொல்லியல் ஆய்வாளர் கேகே முகம்மத் பேட்டி - 3

  அபிநயா   | Last Modified : 09 Oct, 2019 04:21 pm
ram-mandir-existed-before-babri-mosque-in-ayodhya-kk-muhammed

ராமஜன்ம பூமியின் மீது எழுப்பப்பட்டிருக்கும் கட்டிடத்திற்கு முன்னர், அங்கே ஆலயம் இருந்ததாக ஒரு தரப்பினரும், மசூதி இருந்ததாக மறு தரப்பினரும் கூறிவரும் நிலையில், அங்கே ஆலயம் தான் இருந்தது என அதன் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த, தொல்லியல் ஆய்வாளர் கேகே முகம்மத் குறிப்பிட்டுள்ளார்.

ராமஜன்ம பூமியில் ஆலயம் இருந்ததற்கு, மூன்று வகையான ஆதாரங்களை அவர் முன் வைத்திருந்த நிலையில், 1976 ல், பிபி.லால் - ன் கீழ் மேற்கொண்ட முதல் ஆராய்ச்சியில் கிடைத்த ஆதாரங்களும், 2003 ல் மேற்கொண்ட இரண்டாம் ஆராய்ச்சியில் கிடைத்த ஆதாரங்களும், அங்கே ஆலயம் தான் இருந்தது என்று ஆநித்தரமாக நிரூபித்திருக்கும் நிலையில், இலக்கிய நூல்களிலும், அயோத்தியா குறித்த தகவல்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் கேகே முகம்மத்.

இலக்கிய ஆதாரங்கள் :

ராம்ஜன்ம பூமியில், முன்பு ஆலயம் இருந்ததற்கு, பல இலக்கிய ஆதாரங்கள் உள்ளன. அயனி அக்பாரியின் மூன்றாம் பாகத்தில், அயோத்தியா, இந்துக்களின் வழிப்பாட்டு தலமாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜஹாங்கீர் ஆட்சியின் போது, வில்லியம் ஃபில்ச் என்ற பயணி, அவரது பயணக் கட்டுரையில், இந்துக்களின் வழிப்பாட்டு தலமாக அயோத்தியா இருந்ததாக எழுதியுள்ளார்.

ஜஹாங்கீர் மற்றும் ஷாஜகானின் ஆட்சிகளில், அயோத்தியா இந்துக்களின் வழிப்பாட்டு தலமாக இருந்ததாக, டச்சு புவியியல் ஆய்வாளர் ஜான் தேலீத் மற்றும் தாமஸ் ஹெர்பர்ட் ஆகிய இருவரும் கூறியுள்ளனர்.

ராமஜன்ம பூமியின் மீது எழுப்பப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் கீழ் ஆலயம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டடைந்தோம்: தொல்லியல் ஆய்வாளர் கேகே முகம்மத் பேட்டி - 1

ராமஜன்ம பூமியின் மீது எழுப்பப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் கீழ் ஆலயம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டடைந்தோம்: தொல்லியல் ஆய்வாளர் கேகே முகம்மத் பேட்டி - 2

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close