ராமஜன்ம பூமி ஆய்வாளர் கேகே முகம்மத் மக்களுக்கு அன்பான வேண்டுகோள் !!!

  அபிநயா   | Last Modified : 10 Oct, 2019 10:09 pm
kk-mohammed-s-soft-advice-to-indians

ராமஜன்ம பூமியின் மீது எழுப்பப்பட்டிருக்கும் கட்டிடத்திற்கு முன்னர், அங்கே ஆலயம் தான் இருந்தது எனக் குறிப்பிட்டுள்ள அதன் தொல்லியல் ஆய்வாளர் கேகே முகம்மத், தன் இன மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.

ராமஜன்ம பூமியில் ஆலயம் இருந்ததற்கு, மூன்று வகையான ஆதாரங்களை அவர் முன் வைத்திருந்த நிலையில், 1976 ல், பிபி.லால் - ன் கீழ் மேற்கொண்ட முதல் ஆராய்ச்சியில் கிடைத்த ஆதாரங்களும், 2003 ல் மேற்கொண்ட இரண்டாம் ஆராய்ச்சியில் கிடைத்த ஆதாரங்களும், அங்கே ஆலயம் தான் இருந்தது என்று ஆநித்தரமாக நிரூபித்திருக்கும் நிலையில், இலக்கிய நூல்களிலும், அயோத்தியா குறித்த தகவல்கள் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார் கேகே முகம்மத்.

இதை தொடர்ந்து, ராமஜன்ம பூமி விவகாரத்தை ஒரு சமூக பிரச்சனையாகவும் பார்க்குமாறு இந்திய மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், "முஸ்லீம்களின் புனித தலங்களான மெக்கா மெதினாவை போல தான் இந்துக்களுக்கு அயோத்தியா என்பதை ஒவ்வொரு முஸ்லீமும் உணர வேண்டும். அயோத்தியாவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிகக் குறைந்து காணப்படும் நிலையில், அங்கே ஒரு மசூதிக்கான தேவை தற்போது இல்லை. எனவே, இவற்றை கருத்தில் கொண்டு, முஸ்லீம்கள், இந்துக்களிடம், அயோத்தியாவை ஒப்படைக்க வேண்டும். முஸ்லீம்களுக்காக, அவர்கள் நிறைந்து காணப்படும் வேறு ஒரு இடத்தில், இந்துக்கள் ஒரு மசூதியை அமைத்து தரலாம" என அவர் கூறியுள்ளார்.  

இந்துக்களுக்கு அயோத்தியாவை தர முஸ்மீம்கள் முன் வந்த நிலையில், மார்க்சிஸ்ட் வரலாற்றாளர்கள், வேவையற்ற தவறான செய்திகளை பரப்புவதன் மூலம், முஸ்லீம் இனத்தவர்களை தவறான பாதையில் கொண்டு செல்கின்றனர் என்றும், இவர்களின் தவறான கருத்துக்களுக்கு செவி சாய்க்காமல், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னரே, அயோத்தியாவை இந்துக்களிடம் ஒப்படைக்குமாறு, 1976 ல் மேற்கொண்ட, அயோத்தியாவின் முதல் ஆராய்ச்சியில் பங்குபெற்ற ஒரே முஸ்லீம் என்ற அக்கறையுடன், தன் இன மக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார் கேகே முகம்மத்.

ராமஜன்ம பூமியின் மீது எழுப்பப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் கீழ் ஆலயம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டடைந்தோம்: தொல்லியல் ஆய்வாளர் கேகே முகம்மத் பேட்டி - 3

ராமஜன்ம பூமியின் மீது எழுப்பப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் கீழ் ஆலயம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டடைந்தோம்: தொல்லியல் ஆய்வாளர் கேகே முகம்மத் பேட்டி - 2

ராமஜன்ம பூமியின் மீது எழுப்பப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் கீழ் ஆலயம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டடைந்தோம்: தொல்லியல் ஆய்வாளர் கேகே முகம்மத் பேட்டி - 1

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close