இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்

  அபிநயா   | Last Modified : 12 Oct, 2019 04:40 pm
forbes-india-rich-list-2019-mukesh-ambani-tops-for-12th-year-in-a-row

ஃபோர்ப்ஸ்  பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் உலக பணக்காரர்கள் பட்டியலில், இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி, தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார்.

ஃபோர்ப்ஸ் பத்திர்க்கை, ஆண்டுக்கு ஒரு முறை இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும். அதில் 12 ஆண்டுகளாக தொடர்ந்து, ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர், முகேஷ் அம்பானி முதலிடம் வகித்து வருகிறார்.

அவரது சொத்து மதிப்பு, கடந்த ஆண்டை விட 410 கோடி டாலர் அதிகரித்து, 5,140 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு அதிகரித்ததற்கு காரணம், தொடங்கப்பட்டு வெறும் மூன்று ஆண்டுகளேயான ஜியோ என்றும், இதுவரை 34 கோடி வாடிக்கையாளர்களை ஜியோ பெற்றுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

இப்பட்டியலில் கௌதம் அதானி 10-வது இடத்திலிருந்து  2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும், இந்துஜா சகோதரர்கள், பலோன்ஜி மிய்ஸ்திரி மற்றும் உதய் கோட்டக் ஆகிய மூவரும், 3,4 மற்றும் 5-வது இடங்களை பிடித்துள்ளனர்.

பங்குச்சந்தைகளில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு வரும் நிலையிலும், இந்த பட்டியலில் உள்ள இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு, தனிப்பட்ட முறையில் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஒட்டுமொத்த அளவில் அவர்களின் சொத்து மதிப்பு 8 சதவீதம் குறைந்து 45,200 கோடி டாலராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close