கர்தார்பூர் சீக்கியர் புனிதத்தல திறப்புவிழாவில் பிரதமர் மோடி?

  அபிநயா   | Last Modified : 12 Oct, 2019 09:14 pm
prime-minister-modi-will-inaugurate-kartarpur-corridor-on-november-8-union-minister-harsimrat-kaur-badal

பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலத்தை, வரும் நவம்பர் 8 ஆம் தேதியன்று,  பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பதால் தெரிவித்துள்ளார். 

கர்தார்பூர், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள தேரா பாபா நானக் கோவிலையும், பாகிஸ்தானின் தர்பார் சாஹிப் குருத்வாராவையும் இணைக்கும் ஒரு வழித்தடமாகும். சீக்கியர்களின் புனித தலமான கர்தார்பூரை இந்திய பிரதமர் மோடி, வரும் நவம்பர் 8 ஆம் தேதி திறந்து வைக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பதால் கூறுகையில், "குரு நானக் ஜியின் அருளால், கர்தார்பூர் இறுதியாக திறக்கப்படவுள்ளது. 72 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸால் இழைக்கப்பட்ட  தவறுகளை, திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார் பிரதமர் மோடி" என்று குறிப்பிட்டுள்ளார்.

திறப்பு விழாவை தொடர்ந்து, சுல்தான்பூர் லோதிக்கு, பிரதமர் மோடி, மரியாதை செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகின்றது. பிரதமரின் வருகையை தொடர்ந்து, நவம்பர் 11 ஆம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், நவம்பர் 12 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், ஷிரோமணி குருத்வாரா ப்ரபந்தக்கின் உறுப்பினர்களை சந்திக்கவிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், கர்தார்பூர் குறித்து இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் கலந்துரையாடிய நிலையில், இந்தியாவிலிருந்து, ஒரு நாளைக்கு, 5,000 முதல் 10,000 பேர் கர்தார்பூருக்கு வரலாம் எனவும், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தரும் எனவும் பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close