கடற்கரையை சுத்தம் செய்வது போல் நாடகமாடுகிறார்  மோடி - தமிழ்நாடு காங்கிரஸ் குற்றச்சாட்டு

  அபிநயா   | Last Modified : 13 Oct, 2019 07:42 pm
congress-takes-swipe-at-pm-narendra-modi-plogging-on-beach-at-mamallapuram-calls-it-drama

சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் வருகையொட்டி தமிழ்நாட்டின் மாமல்லபுரத்திற்கு வந்திருந்த இந்திய பிரதமர் மோடி, கடற்கரையில் இருந்த குப்பகளை அகற்றும் பணியில் ஈடுபட்டதை தொடர்ந்து, அவர் நாடகமாடுவதாக குற்றம் சுமத்தியுள்ளனர், தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர்.

சீன அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பை மேற்கொள்வதற்காக தமிழ்நாட்டின் மாமல்லபுரத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று வந்திருந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. அன்று சீன அதிபருடன் இணைந்து, அங்குள்ள கோவில்களையும், சிற்பங்களையும், இந்திய கலாச்சாரத்தை உணர்த்தும் விதமான கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்த பிரதமர், இரண்டாவது நாளான நேற்று காலை சாதாரண உடையணிந்தபடி, கடற்கரை பகுதியில் இருந்த குப்பைகளை சுத்தம் செய்தார்.

நடைபயணம் மேற்கொள்ளும் போது இப்படி சுற்றுப்புரங்களை சுத்தம் செய்யும் முறை (plogging), கடந்த 2016 ஆம் ஆண்டு, ஸ்வீடனில் முதன் முறையாக தொடங்கப்பட்டது. அம்முறையை பின்பற்றிய பிரதமர் மோடி, காலை நேர நடைபயணத்தின் போது கடற்கரையில் தென்பட்ட குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார்.

ஆனால், இரு பெரும் தலைவர்களின் வருகையறிந்து ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் குப்பைகள் எங்கிருந்து வந்தன என்ற கேள்வியெழுப்பி, மக்களின் முன்னிலையில் நாடகமாடுகிறார் மோடி என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அவரை குற்றம் சாட்டி வருகின்றனர்.

இவர்களின் கருத்துக்கள் ஒருபுறம் இருந்தாலும், பிரதமரின் இந்த செயல், பல தரப்பினராலும் பாராட்டப்பட்டு வரும் நிலையில், நெட்டிசன்களின் புகழ் மழையில் தற்போது நனைந்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close