பிரதமர் மோடியின் "ஹே சாகர், தும்ஹே மேரா ப்ரனாம்"

  அபிநயா   | Last Modified : 13 Oct, 2019 07:49 pm
hey-sagar-tumhe-mera-pranam-pm-modi-shares-poem-penned-by-him-in-hindi-during-his-stay-in-mahabalipuram

சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை வருவையொட்டி, தமிழ்நாட்டின் மாமல்லபுரத்திற்கு வந்திருந்த இந்திய பிரதமர் மோடி, கடற்கரையில், காலை நேர நடைபயணத்தில் ஈடுபட்டிருந்த போது, தன் மனதில் தோன்றிய கவிதையை, இந்திய மக்களிடம் ட்விட்டர் மூலம் பகிர்ந்துள்ளார்.

சீன அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பிற்காக, தமிழ்நாட்டின் மாமல்லபுரத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று வந்திருந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. அன்று சீன அதிபருடன் இணைந்து, அங்குள்ள கோவில்களையும், சிற்பங்களையும், இந்திய கலாச்சாரத்தை உணர்த்தும் விதமான கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்த பிரதமர், இரண்டாவது நாளான நேற்று காலை சாதாரண உடையணிந்தபடி, கடற்கரை பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார்.

அப்போது அவர் மனதில் தோன்றிய கவிதை ஒன்றை இந்திய மக்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணிய பிரதமர், அதை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்த அவரது பதிவில், காலை நேர கடற்கரையின் ரம்மியமான காட்சி தன் மனதின் ஆழம் வரை சென்றதாகவும், அந்த கடல் அலைகளின் ஓசையை ரசித்தபோது தன் மனதில் தோன்றிய கவிதையை இந்திய மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த கவிதையை அவர், "ஹே சாகர், தும்ஹே மேரா ப்ரனாம்" என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே, கடந்த 2018 ஆம் ஆண்டு, "ராமதா ராம் அகேலா" என்று, தான் குஜராத்தி மொழியில் எழுதிய கவிதையை பதிவிட்டிருந்தார் பிரதமர் மோடி.

நடைபயணம் மேற்கொள்ளும் போது சுற்றுப்புரங்களை சுத்தம் செய்யும் plogging எனப்படும் முறையை பின்பற்றி, அவர் கடற்பகுதியில் தென்பட்ட குப்பைகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டார். இவரின் இந்த செயலுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர்கள், இவர் மக்கள் முன்னிலையில் நாடகமாடுவதாக குற்றம் சுமத்தியபோதும், பிரதமரின் இந்த செயல், பல தரப்பினராலும் பாராட்டப்பட்டு, நெட்டிசன்களின் புகழ் மழையில் இவரை நனைய வைத்துக்கொண்டிருக்கிறது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close