காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் - அதிர்ச்சியில் காஷ்மீர் மக்கள் 

  அபிநயா   | Last Modified : 18 Oct, 2019 08:42 am
terrorist-attack-in-kashmir

ஜம்மு காஷ்மீரின் பிஜ்பெஹரா நகரில், தாக்குதலில் ஈடுபட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் மூன்று பேரை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டு கொன்றனர்.

காஷ்மீர் மாநிலம்  பிஜ்பெஹரா நகரில் மக்கள் வசிக்கும் பகுதியில்,  ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் மறைந்துள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, இந்திய ராணுவ வீரர்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், ராணுவ வீரர்களின் தேடுதல் வேட்டையை அறிந்த  ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள், துப்பாக்கிகளால் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதை தொடர்ந்து, ஒரு வீரர் காயமடைந்துள்ளார். 

இதனால் மறுதாக்குதலில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள், அந்த அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றதாகவும், அப்பகுதியில் இன்னும் சில பயங்கரவாதிகள் இருக்க வாய்ப்புள்ள நிலையில், இந்திய ராணுவம், தங்களின் தேடுதல் வேட்டையை தொடர்ந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

அப்பகுதி முழுவதும் தற்போது காஷ்மீர் போலீசாரின் கட்டுபாட்டுக்குள் இயங்கி வருகிறது. மக்கள் வசிக்கும் பகுதியானதால் பலத்த பாதுகாப்பு விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close