காஷ்மீர் விவசாயிகளை இந்திய ராணுவம் பாதுகாக்கும் - லெப்டினன்ட் தில்லான் உறுதி

  அபிநயா   | Last Modified : 18 Oct, 2019 11:03 am
indian-army-takes-care-of-kashmir-farmers

ஜம்மு காஷ்மீரில் தற்போது ஆப்பில் ஏற்றுமதி பணிகள் தொடங்கியுள்ள நிலையில், ஆப்பிள் ஏற்றுமதியாளர் ஒருவர் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து, விவசாயிகள் யாரும் அஞ்ச வேண்டாம் எனவும், அவர்களை பாதுகாக்க இந்திய ராணுவம் இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்  லெப்டினன்ட் தில்லான்.

ஆப்பிள் ஏற்றுமதிக்கு பெயர் போன மாநிலமான ஜம்மு காஷ்மீரில், கடந்த ஆகஸ்ட் முதல், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களினால், ஏற்றுமதிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது, நிலைமை சீராகி வருவதாக கூறப்பட்டு ஏற்றுமதிகள் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில்,  ஆப்பிள் ஏற்றுமதியாளர் ஒருவர் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து, அம்மாநில விவசாயிகள் அனைவரும் பணிகளை தொடங்க அஞ்சியிருந்த நிலையில், காஷ்மீர் விவசாயிகளை பாதுகாக்க இந்திய ராணுவ வீரர்கள் இருப்பதாகவும், பயங்கரவாதிகளின் தாக்குதல்களை நினைத்து இனி அஞ்ச வேண்டும் எனவும் உறுதியளித்துள்ளார்  லெப்டினன்ட் ஜெனரல் தில்லான்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெற பட்டதை தொடர்ந்து, பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து காஷ்மீர் போலீசாரும், இந்திய ராணுவமும் மக்களை பாதுகாத்து வந்த நிலையில், அம்மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் முதல் இழப்பு இதுதான் எனவும், இனி இது தொடராது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close