காஷ்மீர் மாநிலம் - ஃபரூக் அப்துல்லாவின் மகள் கைது

  அபிநயா   | Last Modified : 18 Oct, 2019 08:50 am
farooq-abdullah-s-daughter-got-arrested

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து, பொது பாதுகாப்பின் அடிப்படையில், ஃபரூக் அப்துல்லா, அவர் மகன் ஒமர் அப்துல்லா,  உட்பட அம்மாநிலத்தின் பல தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, தற்போது  ஃபரூக் அப்துல்லாவின் மகள் மற்றும் சகோதரி இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி  ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை  திரும்ப பெற மத்திய அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, பாதுகாப்பின் அடிப்படையில், அம்மாநிலத்தின் முக்கிய தலைவர்களான  ஃபரூக் அப்துல்லா, அவர் மகன் ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உட்பட பல தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்றதுக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டதன் காரணமாக  ஃபரூக் அப்துல்லாவின்  மகள் சாஃபியா மற்றும் அவரது சகோதரி சுரயா அப்துல்லா இருவரையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close