வங்கதேசத்தை சேர்ந்த ஜமாத்-உல்-முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் நோக்கமும் பின்னனியும்

  அபிநயா   | Last Modified : 18 Oct, 2019 08:01 pm
origin-and-ideology-of-jamat-ul-mujahideen-bangladesh

கடந்த ஆகஸ்ட் மாதம், ஜமாத்-உல்-முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இஜாஸ் அஹமது என்பவர் கொல்கத்தா போலீசாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  ஜமாத்-உல்-முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு எங்கு எப்போது தொடங்கப்பட்டது, அதன் நோக்கம் மற்றும் பின்னனி என்ன என்பது குறித்து சிறிதாக காணலாம்

வங்கதேசத்தை பிறப்பிடமாக கொண்ட ஜமாத்-உல்-முஜாஹிதீன் எனப்படும் பயங்கரவாத அமைப்பு, கடந்த 1998 ஆம் ஆண்டு, ஷேக் அப்தூர் ரஹ்மான் என்பவரால் தொடங்கப்பட்டது. ஆனால், 2001 ஆம் ஆண்டிற்கு பிறகே இப்படி ஓர் அமைப்பு உள்ளது என்பது குறித்து வெளி உலகிற்கு தெரிய துவங்கியது. 

இந்த அமைப்பின் முக்கிய குறிக்கோள், வங்கதேச அரசை வீழ்ச்சியடைய செய்து, ஷரியா சட்டத்தினை நிலைநாட்டுவதே ஆகும். இதற்காக இந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள், வங்கதேசத்தில், பல வெடிகுண்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

பல வகையான பொழுதுபோக்கு சாதனங்களை தவிர்ப்பதோடு, ஜனநாயகம், மதசார்பின்மை போன்ற கருத்துக்களும் எதிரானவர்களாக கருதப்படுகின்றனர். 

மற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பிலிருந்து சற்று மாறுபட்டு காணப்படும் இவர்கள், பிற இஸ்லாமிய அமைப்புகள் பின்பற்றும் பல விதிமுறைகளை எதிர்ப்பதோடு, இவர்களுக்கென தனி கட்டுபாடுகள் விதித்து, அதை பின்பற்றி வருகின்றனர். 

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் உயர் ஆணையரகம்  ஜமாத்-உல்-முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பிற்கு நிதியுதவி செய்து வருவதாக இந்திய புலனாய்வு துறை குறிப்பிட்டிருந்தது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close