இந்தியா முழுவதும் படர திட்டமிட்டிருக்கும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு

  அபிநயா   | Last Modified : 18 Oct, 2019 08:49 pm
jamaat-ul-mujahideen-bangladesh-trying-to-expand-footprint-in-india

ஜமாத்-உல்-முஜாஹிதீன் எனப்படும் வங்கதேச பயங்கரவாத அமைப்பு, இந்தியா முழுவதும் தங்களது அமைப்பினை படரவிட திட்டமிட்டிருப்பதாக இந்திய தேசிய விசாரணை அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம், இந்த அமைப்பை சேர்ந்த இஜாஸ் அஹமது என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்ததை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், தங்களது அமைப்பை இந்தியாவில் தொடங்குவதற்கு, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், பீகார், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை தேர்வு செய்திருப்பது தெரிய வந்துள்ளதாக, தேசிய விசாரணை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தேசிய விசாரணை அமைப்பின் ஜெனரல் மோடி கூறுகையில், இந்த அமைப்பை சேர்ந்த 125 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், அந்த நபர்கள் குறித்த தகவல்களை மாநிலங்களுக்கு அனுப்பி கண்காணிக்கும் படி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 2014-2018 ஆண்டுகளில், கர்நாடகா மாநில பெங்களூர் நகரில் மட்டும் சுமார் 20 முதல் 22 கிளைகள் வரை இந்த அமைப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும், அம்மாநில எல்லை பகுதிகளில் ஏவுகனை சோதனைகளும் இந்த அமைப்பு மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களை இச்செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காக, பெங்களூர் நகரில் அனுமதியில்லாமல் வசித்து வரும் அனைத்து வங்கதேச மக்களையும் வெளியேற்றுமாறு, கர்நாடக மாநில போலீசாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் ஜெனரல் மோடி.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close