கர்நாடகா மாநிலத்தில் ஒளிந்திருக்கும் ஸ்லீப்பர் செல்ஸ் - அதிர்ச்சியில் மாநில அரசு!!!

  அபிநயா   | Last Modified : 18 Oct, 2019 09:16 pm
some-terror-sleeper-cells-active-in-bengaluru-mysuru-karnataka-home-minister-basavaraj-bommai

ஜமாத்-உல்-முஜாஹிதீன் அமைப்பு, கர்நாடகா மாநில பெங்களூர் நகரில் மட்டும் சுமார் 20 முதல் 22 கிளைகள் வரை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து, அம்மாநிலத்தில், பயங்கரவாத எதிர்ப்புப் படை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் அம்மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மாயி.

பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்துவிட்டு, பதுங்கி மறைமுக வாழ்க்கை வாழ்ந்து, தலைமையிடமிருந்து உத்தரவு வந்ததும் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளான "ஸ்லீப்பர் செல்ஸ்" எனப்படும் பயங்கரவாதிகள் பலரும் பெங்களூர் நகரில் மறைந்து வாழ்ந்து வருவதாக தேசிய விசாரணை அமைப்பு கூறியதை தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தில் பயங்கரவாத எதிர்ப்புப் படை உருவாக்கப்படவுள்ளதாகவும், வரும் நவம்பர் 1 முதல் அவர்களது பணி தொடங்கும் எனவும் கூறியுள்ளார் பசவராஜ் பொம்மாயி.

தேசிய விசாரணை அமைப்பின் ஜெனரல் மோடியின் அறிவுறுத்தலின் படி, பெங்களூர் நகரில் அனுமதியில்லாமல் வசித்து வரும் அனைத்து வங்கதேச மக்களையும் வெளியேற்றும் பணியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளதாகவும், கர்நாடக மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் காவல் போடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014-2018 ஆண்டுகளில், கர்நாடகா மாநில பெங்களூர் நகரில் மட்டும் சுமார் 20 முதல் 22 கிளைகள் வரை இந்த அமைப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும், மாநில எல்லை பகுதிகளில் ஏவுகனை சோதனைகள் வரை இந்த அமைப்பு மேற்கொண்டுள்ளதாக கிடைத்துள்ள தகவல்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாகவும் கூறியுள்ளார் பசவராஜ் பொம்மாயி.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close