கமலேஷ் திவாரி கொலை வழக்கில் ஐந்து பேர் கைது - தொடரும் போலீஸ் விசாரணை!!

  அபிநயா   | Last Modified : 19 Oct, 2019 03:33 pm
5-arrested-in-gujarat-in-up-hindu-group-leader-s-killing

உ.பி மாநிலம் லக்னோ நகரில், இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்ததை தொடர்ந்து, அவரது கொலைக்கு காரணமான 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி, உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் நேரத்தில், கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்ததை தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டிருந்த போலீசார், 5 பேரை தற்போது கைது செய்துள்ளனர். 

இந்த விசாரணை குறித்து கூறிய ஜெனரல் ஓ.பி. சிங், இந்த கொலையில் சம்பந்தப்பட்ட இருவர், உ.பி. மாநிலம் பிஜ்நூர் நகரில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், மற்ற மூவர் குஜராத் மாநிலத்தில் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் படி, குஜராத் போலீசாரின் உதவியுடன் மௌளானா மௌசின் ஷேக்(24), ரஷீத் அஹமது பதான்(23) மற்றும் ஃபைசான்(21) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை கண்டுபிடிக்கும் தீவிர பணியில், தற்போது இருமாநில போலீசாரும் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில், அதற்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறி வீட்டிற்குள் நுழைந்த மர்ப நபர்கள் தான் கமலேஷ் - ன் கொலைக்கு காரணம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனிடையில், சிசிடிவியில் பதிவாகியுள்ள வீடியோவில், இனிப்புகளுடன் வீட்டிற்குள் நுழையும் மர்ப நபர்களின் காட்சிகள் இதனை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளன.

இந்த விசாரணையில் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் ஐவரை  தற்போது கைது செய்துள்ள போலீசார் மேலும் இருவரை கண்டுபிடிக்கும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில், ஈராக்கை சேர்ந்த ஐஸ்ஐஸ் பயங்கரவாத அமைப்பு தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கமலேஷ் வழக்கு பதிவு செய்திருந்தும், உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும், மத்திய அரசும் அதை கண்டுகொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ள ஒரு வீடியோ பதிவு நேற்று வெளியாகியுள்ளது.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close