கமலேஷ் திவாரியின் கொலைக்கான பின்னனி: உ.பி போலீஸ் அதிர்ச்சித் தகவல்!!

  அபிநயா   | Last Modified : 19 Oct, 2019 07:12 pm
the-alleged-killers-of-kamlesh-tiwari-their-method-and-their-motives

உ.பி மாநிலம் லக்னோ நகரில், இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி கொடூரமான முறையில் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அவரது கொலைக்கு காரணமான 5 பேரை போலீசார் கைது செய்திருந்த நிலையில், அவரது இறப்பிற்கு பின் பல திடுக்கிடும் தகவல்களும் காரணங்களும் இருக்கக்கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி, நேற்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் நேரத்தில், அவரது வீட்டில், கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்ததை தொடர்ந்து, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

கடந்த 2015 ஆம் ஆண்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆஸாம் கான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று கூறியதை தொடர்ந்து, அதற்கு பதிலடி தரும் விதமாக, நபிகள் நாயகம் ஓரினச் சேர்க்கையாளர் என்று குறிப்பிட்டிருந்தார் கமலேஷ் திவாரி.

இவரின் இந்த கருத்தினால் அதிருப்தியடைந்த முஸ்லீம் இனத்தவர்கள் இவருக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனடிப்படையில், இவர் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு, இது குறித்து விசாரணையில் ஈடுபட்டிருந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் இவர் மீதுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்து ஜாமீன் வழங்க உத்திரவிட்டது. 

இந்நிலையில், கடந்த மே 2018 இல், ஈராக்-ன் ஐஸ்ஐஸ் பயங்கரவாத அமைப்பு தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக வழக்கு பதிவு செய்திருந்தார் கொலை செய்யப்பட்ட கமலேஷ் திவாரி. எனினும், உ.பி. மாநில தலைவர் யோகி ஆதித்யநாத்தும், மத்திய அரசும் இவரது இந்த குற்றச்சாட்டை பெரிதுபடுத்தாமல் அலட்சியம் காட்டி வந்துள்ளது. இதை தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களாக, தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு அளிக்க கோரியும், உ.பி. போலிசாரிடம் வேண்டுகோள் விடுத்து வந்துள்ளார் கமலேஷ். 

இந்நிலையில் இவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. அழகாகத் திட்டமிட்டு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் கொலை செய்வதைப் போலவே கழுத்தை அறுத்தும், பின்பு துப்பாக்கியால் தாக்கியும் கொலை செய்துள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டின் பகையை மனதில் வைத்து, முஸ்லீம் இளைஞர்கள் சிலர் திட்டமிட்டு அந்த அமைப்பை போலவே கொலை செய்திருக்கலாம் என்றும் சிலர் கூறி வந்த நிலையில், போலீசாரால் கைது செய்யப்பட்ட ஐவருமே முஸ்லீம் இளைஞர்கள் என்பதும், திவாரியை கொலை செய்வதற்காக கடந்த இரண்டு மாதங்களாக திட்டமிட்டு அவரை கண்காணித்து வந்ததாக, கைது செய்யப்பட்ட ஐவரும், போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளதும், இவர்களின் இந்த சந்தேகம் உண்மையாக இருப்பதற்கான சாத்திய கூறுகளை அதிகரித்துள்ளது.

இதனிடையில், மற்றும் ஓர் திடுக்கிடும் தகவலாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஓர் மாதத்திற்குள் இந்து இயக்கத்தைச் சேர்ந்த 4 தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி, உ.பி. மாநில தியோபந்த் நகரில், பாஜக தலைவர் சௌதிரி யாஷ்பல் சிங், அக்டோபர் 10 ஆம் தேதி, பஸ்தி நகரில், பாஜக தலைவர் கபிர் திவாரி, அக்டோபர் 13 ஆம் தேதி, தியோபந்த் நகரில், தாரா சிங் ஆகியோரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த கொலைக்கும் ஈராக்கின் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்கும் தொடர்பு உள்ளதா என்ற ரீதியில் விசாரணை மேற்கொண்டு வரும் உ.பி. போலீசார், முஸ்லீம் இளைஞர்களால் கமலேஷ் கொலை செய்யப்பட்டிருந்தால், அது சமூகத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் அனைத்து உண்மைகளையும் கூறாமல் அடக்கி வாசிக்கிறதோ என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close