ஜுனைத் கானாக மாறி சொத்துக்கள் குவித்த பி.எம்.சி வங்கி எம்.டி ராய் தாமஸ்!!

  அபிநயா   | Last Modified : 19 Oct, 2019 06:19 pm
md-joy-thomas-became-junaid-khan-married-his-assistant-per-islamic-rituals-and-owned-properties-with-her

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் எம்.டி. ராய் தாமஸ், முஸ்லீம் மத முறையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, ஜுனைத் கானாக மாறி சொத்துக்கள் குவித்து வந்த ரகசியத்தை கண்டுபிடித்துள்ளது சிறப்பு விசாரணைக் குழு.

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் எம்.டி. ராய் தாமஸ், கடந்த 2012 ஆம் ஆண்டு, தனது வங்கியின் மற்றொரு பெண் அதிகாரியை முஸ்லீம் மத முறையில் திருமணம் செய்து கொண்டு, அவரது பெயரிலும் பல சொத்துக்கள் வாங்கி குவித்திருக்கும் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. 

அவரது முதல் மனைவி மற்றும் மகன்களின் பெயரில் பல சொத்துக்கள் உள்ள நிலையில், இவரது இரண்டாவது மனைவியின் பெயரிலும் பல சொத்துக்கள் உள்ளதாக சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி, பொருளாதார குற்றப்பிரிவுக்கான அமைப்பு, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் முன்னாள் எம்.டி ராய் தாமஸ் மீது வழக்கு பதிவு செய்திருந்ததை தொடர்ந்து, கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி சிறப்பு விசாரணைக் குழு அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதை தொடர்ந்து, பி.எம்.சி யின் வங்கி கவர்னர்கள் அனைவரையும் பதவி நீக்கம் செய்த இந்திய ரிசர்வ் வங்கி, புதிய அதிகாரிகளை நியமித்துள்ளது. இது போன்ற தவறுகள் மேலும் நிகழாமல் காப்பதற்காக புதிய பல கட்டுபாடுகளையும் ரிசர்வ் வங்கி விதித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close