கமலேஷ் திவாரி கொலையாளிகளின் தலைகளுக்கு 1 கோடி விலை வைத்து சிவசேனா தலைவர் அறிவிப்பு!!!

  அபிநயா   | Last Modified : 19 Oct, 2019 10:09 pm
shiv-sena-leader-announces-rs-1-crore-bounty-on-kamlesh-tiwari-s-killers

இந்து மகாசபாவின் தலைவர் கமலேஷ் திவாரியை கொலை செய்த கொலைகாரர்களின் தலைகளை கொய்து வருபவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என சிவசேனா கட்சித் தலைவர்களில் ஒருவரான அருண் பாதக் அறிவித்துள்ளார்.

இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி, நேற்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் நேரத்தில், அவரது வீட்டில், கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்ததை தொடர்ந்து, இவரின் கொலைக்கு காரணமான 5 பேரை கைது செய்துள்ள போலீசார், மேலும் இருவரை தேடி வருகின்றனர். 

இதை தொடர்ந்து, கமலேஷ் திவாரியின் கொலைக்கு பின் பல காரணங்களும் பின்னனிகளும் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அவரது கொலைக்கு காரணமானவர்களின் தலைகளை கொய்து வருபவர்களுக்கு ரூ.1கோடி பரிசாக வழங்கப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சிவசேனா கட்சி தலைவர் அருண் பாதக்.

மேலும், கொலையாளிகளை போலீசார் கண்டுபிடித்திருந்தாலும், அவர்களின் கழுத்துக்கள் அறுக்கப்படும் வரை தனக்கு நிம்மதி இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார் அருண் பாதக்.

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close