ஆயுதத்தை கைவிட்டால் ஒழிய பேச்சு வார்த்தைக்கு இடமில்லை : நாகா தீவிரவாதிகள் குறித்து மாநில ஆளுநர் எச்சரிக்கை

  அபிநயா   | Last Modified : 19 Oct, 2019 10:26 pm
no-separate-flag-constitution-for-nagas-talks-can-t-be-held-under-shadow-of-guns-nagaland-governor-rn-ravi

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறபட்டதை தொடர்ந்து, நாகாலாந்து மாநிலத்திற்கும் தனி கொடியும், அரசியலமைப்புச் சட்டமும் அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டு விட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், ஆயுதத்தை கைவிட்டால் ஒழிய பேச்சு வார்த்தைக்கு இடமில்லை என்று தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அம்மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி.

நாகாலாந்தை சேர்ந்த என்.எஸ்.சி.என்-ஐஎம் என்ற அமைப்பு, நாகாலாந்து மக்களுக்காக ஓர் தனி நாடும், கொடியும், அரசியலமைப்புச் சட்டமும் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பலகாலமாக வன்முறை போராட்டங்களை மேற்கொண்டு வந்தது. 

இதனிடையில், நரேந்திர மோடி பிரதமராக பதிவியேற்றதை தொடர்ந்து, கடந்த 2015ஆம் ஆண்டில், என்.எஸ்.சி.என்-ஐஎம் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடைய தனி நாடு கோரிக்கையை கைவிடச்செய்து ஓர் ஓப்பந்தம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மத்திய அரசு, கடந்த ஆகஸ்ட் மாதம்,  ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்றதை தொடர்ந்து, நாகாலாந்து மாநிலத்திற்கும் தனி கொடியும், அரசியலமைப்புச் சட்டமும் அமைக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்து விட்டதாக வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தன.

இதை தொடர்ந்து, நாகாலாந்து மாநில கவர்னர் ஆர்.என்.ரவி, நேற்று, (அக்டோபர் 18) அம்மாநிலத்தின் முக்கிய அமைப்புகளுடன் ஓர் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். "பிரதமர் நரேந்திர மோடியின் தெளிவான முடிவினால் கடந்த 22 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அது அனைத்து நாகாலாந்து மக்களையும் திருப்தி படுத்தும் விதமாகவே அமைந்திருந்தது" என்று கூறியுள்ளார்.

இந்த உரையாடலின் முடிவாக, நாகாலாந்து மாநிலம், பிரதமர் மோடியுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் தான் தற்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ள அம்மாநில கவர்னர் ரவி, ஆயுதத்தை கைவிட்டால் ஒழிய பேச்சு வார்த்தைக்கு இடமில்லை என்று தீவிரவாதிகளுக்கு ஓர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close