வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா - காங்கிரஸ் தீவிர எதிர்ப்பு!!!

  அபிநயா   | Last Modified : 20 Oct, 2019 11:48 am
decide-whether-you-are-devotee-of-mahatma-gandhi-or-savarkar-congress-on-bjp-s-bharat-ratna-proposal

மகாராஷ்டிரா மாநில தேர்தலை முன்னிட்டு, வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று உறுதி அளித்த பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக காங்கிரஸ்.கட்சியிலிருந்து பல எதிர்ப்பு குரல்கள் எழும்பியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவைக்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், வினாயக் தாமோதர் சாவர்க்கருக்கு, இந்தியாவின் மிகச்சிறந்த விருதான பாரத் ரத்னா வழங்கப்படும் என்ற உறுதி மொழியை முன்வைத்துள்ளது பாஜக. 

"இந்தியாவில் பல பிரச்சனைகள் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கும் போது இந்த விருதுக்கான உறுதிமொழி தேவையற்றதாகவே தென்படுகிறது. படித்த இளைஞர்கள் பலரும் வேலை இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அது குறித்த எந்த பேச்சும் பாஜகவினரின் பிரச்சாரத்தில் பேசப்படவில்லை. இந்திய பொருளாதாரமும் சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதே இப்போது மிகவும் அவசியமாக உள்ளது. 

இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடியவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கு இந்தியர்கள் அனைவரும் நிச்சயமாக கடமை பட்டிருக்கிறோம். இதில் மஹாத்மா, சாவர்க்கர் என்று வேறுபாடுகள் இல்லை. எனினும், தேர்தல் சமயத்தில்  வழங்கவேண்டிய உறுதி மொழியாக இந்த பாரத ரத்னா விருது எங்களுக்கு தெரியவில்லை" என்று பாஜக வின் உறுதி மொழிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், "மஹாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை சிறப்பித்து முடித்திருக்கும் இந்த நேரத்தில், சாவர்க்கருக்கு பாரத ரத்னா என்ற பேச்சு தேவைதானா, இதற்கு மக்கள் தான் பதிலளிக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close