பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் - அழிக்கப்பட்ட 3 பயங்கரவாத முகாம்கள்

  அபிநயா   | Last Modified : 20 Oct, 2019 07:34 pm
3-terror-camps-destroyed-in-pok

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்திய ராணுவம் மேற்கொண்டிருந்த மறுதாக்குதலில், மூன்று பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதை தொடர்ந்து, 6 முதல் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் 200 முதல் 300 பயங்கரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரி தில்பாக் சிங் ஏற்கனவே கூறியிருந்தார். 

இதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் பகுதியில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் அத்துமீறல்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான குப்பவாராவில், மீண்டும் அத்துமீறி நுழைய முயற்சித்தனர் பயங்கரவாதிகள்.  இந்நிலையில், மறுதாக்குதலில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளுக்கு சொந்தமான மூன்று முகாம்களை தாக்கி அழித்ததோடு, 6 முதல் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்களையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இது தொடர்பாக, இந்திய ராணுவம் முன்னரே அளித்த தகவலின் படி இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து அக்டோபர் 2 ஆம் தேதிக்குள், பாகிஸ்தான் ராணுவம் 2,225 முறை ஜம்மு காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது தெரியவந்துள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close