பயங்கரவாத முகாம்கள் தாக்குதல் - ஜெனரல் பிபின் ராவத்துடன் ராஜாநாத் சிங் கலந்துரையாடல்!!

  அபிநயா   | Last Modified : 20 Oct, 2019 07:57 pm
indian-army-bombs-terror-camps-in-pakistan-occupied-kashmir-rajnath-singh-closely-monitors-development

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான குப்பவாராவில், பயங்கரவாதிகளின் ஊடுறுவல்களை கண்டித்து, இந்திய ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருந்த மறுதாக்குதலில், மூன்று பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதை தொடர்ந்து, ராணுவ ஜெனரல் பிபின் ராவத்துடன் இது குறித்த கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். 

ஜம்மு காஷ்மீர் பகுதியில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் அத்துமீறல்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஞாயிறு) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான குப்பவாராவில், மீண்டும் அத்துமீறி நுழைய முயற்சித்த பயங்கரவாதிகளை அழிப்பதற்காக, மறுதாக்குதலில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளுக்கு சொந்தமான மூன்று முகாம்களை தாக்கி அழித்ததோடு, 6 முதல் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்களையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத்துடன் இது குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகளின் ஊடுறுவல்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, செப் 29., ஆம் தேதியன்று பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் இரண்டு பேர், இந்திய ராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close