மகாபாரதம், மேலும் பழமை வாய்ந்ததாக இருக்கக்கூடும் - தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து!!

  அபிநயா   | Last Modified : 20 Oct, 2019 09:29 pm
mahabharata-much-older-than-currently-postulated-reveals-asi

மகாபாரதம் நாம் நினைப்பதை விட பழம்பெரும் காவியமாக இருக்கக்கூடும் என்று டெல்லி பிரதேசத்திற்கு அருகில் உள்ள சனௌலி நகரத்தில், இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு மையம் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களுள் ஒன்றே மகாபாரதம். சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட இந்த காவியம், இந்திய பண்பாட்டை பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இதிகாசமாக திகழ்கிறது.

இந்நிலையில், இந்தியாவின் தலைநகரமான டெல்லிக்கு 68 கிமி., தொலைவில் உள்ள சனௌலி நகரில், சில ஆண்டுகளாக, தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர்கள், அம்புகள், போர் காலத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், டார்ச்லைட், வாள், கத்தி, பானை என மகாபாரத காலத்தில் உபயோகப்படுத்தப்பட்டதாக கூறப்படும் பல வகையான பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். மேலும், இறுதி சடங்கு மேற்கொள்ளும் இடம் மற்றும் குதிரைகள் பொருந்திய ஓர் தேர் ஆகிய இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இந்த கண்டுபிடிப்புகள் மூலம், மகாபாரதம் நாம் நினைப்பதை விட பழம்பெரும் காவியமாக இருக்கக்கூடும் என்பது நிரூபனமாகியுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close