முஸ்லிம்கள் ஆக்கிரமித்திருக்கும் சர்ச்சைக்குரிய இடங்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் - ஷியா வக்ஃப் வாரிய தலைவர் ரிஸ்வி கோரிக்கை!!!

  அபிநயா   | Last Modified : 22 Oct, 2019 03:29 pm
muslims-should-hand-over-all-disputed-sites-to-hindus-up-shia-waqf-board-chief

இந்துக்களுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்திருக்கும் முஸ்லிம்கள், அவர்களுக்கு அவற்றை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார் உத்திரப்பிரதேச மாநில ஷியா வக்ஃப் வாரிய தலைவர் ரிஸ்வி.

அயோத்தியா வழக்கில், வரும் நவம்பர் 17 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், ஷியா வக்ஃப் வாரிய தலைவர் ரிஸ்வி, ராம்ஜன்மபூமியின் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எவ்வகையான தீர்ப்பை அளித்தாலும், இந்துக்களுக்கு சொந்தமான இடங்கள் தங்களுக்கானது என்று உரிமை கொண்டாடும் முஸ்லிம்கள், அவை அனைத்தையும் அவர்களுக்கு திருப்பி அளிக்கும் வரை இந்த பிரச்சனைக்கான முழு தீர்வு என்றுமே கிடைக்காது என்று கூறியுள்ளார்.

தேவாலயங்கள் அமைக்கப்பட்டிருந்த இடத்தை ஆக்கிரமித்திருந்த முஸ்லிம்கள், அவை அனைத்தையும் மீண்டும் கிறிஸ்துவர்களுக்கே அளித்ததை போல, இந்துக்களிடமிருந்து பறிக்கப்பட்ட இடங்களும் அவர்களுக்கு நிச்சயமாக திருப்பி அளிக்கப்பட வேண்டும். முகலாயர்களான முன்னோர்கள் செய்த தவறுகளை திருத்தி எழுதுவதற்கான தருணம் இது என்று குறிப்பிட்டுள்ளார் ரிஸ்வி.

தவறான முறையில் நிலபரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த 2016 ஆம் ஆண்டு, இவர் மீது, 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close