அரசுக்கு எதிராக என்னை பேசவைக்க ஊடகங்கள் முயற்சித்து வருவதாக ஜோக்கடித்த மோடி: நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் அபிஜித் ட்விட்டரில் கருத்து!!!

  அபிநயா   | Last Modified : 22 Oct, 2019 07:58 pm
pm-joked-about-media-trying-to-trap-me-into-saying-anti-modi-things-abhijit-banerjee

2019 ஆம் ஆண்டு, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பேனர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் டெல்லியில் இன்று சந்தித்து உரையாடியதை தொடர்ந்து, அரசுக்கு எதிராக தன்னை பேசவைக்க ஊடகங்கள் முயற்சித்து வருவதாக மோடி ஜோக்கடித்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அபிஜித் பேனர்ஜி.

டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த, அபிஜித் பேனர்ஜி, மோடியுடனான கலந்துரையாடல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மோடியுடனான தனது உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், இந்தியாவை குறித்த அவரது பார்வை தனித்துவம் வாய்ந்ததாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து, "அரசுக்கு எதிராக என்னை பேசவைக்க ஊடகங்கள் முயற்சித்து வருவதாக ஜோக்கடித்த மோடி, ஊடகங்களான உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்" எனக் கூறி ஊடகக்காரர்களுக்கு ஓர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

மேலும், தன்னுடன் உரையாடுவதற்காக நேரம் ஒதுக்கிய பிரதமருக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார் நோபல் பரிசாளர் அபிஜித் பேனர்ஜி.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close