உங்களை ஏமாற்றி வந்தவர்களின் குடும்பத்தினர் ஒருவர்கூட பயங்கரவாதத்திற்கு பலியானதில்லை - காஷ்மீர் ஆளுநர்!!!

  அபிநயா   | Last Modified : 22 Oct, 2019 08:57 pm
none-of-them-lost-their-own-to-terrorism-j-k-guv-hits-out-at-separatists-and-mainstream-leaders

காஷ்மீர் மக்களை ஏமாற்றி வந்த பிரிவினைவாத தலைவர்களும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல்வாதிகளின் குடும்பத்தினர் ஒருவர்கூட பயங்கரவாதிகளால் இதுவரை உயிரிழந்ததில்லை என்று ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு தெளிவான முறையில் விளக்கியுள்ளார் காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்.

வைஷ்ணோ தேவி பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய காஷ்மீர் மாநில ஆளுநர், "இன்று இந்த பட்டமளிப்பு விழாவில் சாதித்திருக்கும் காஷ்மீர் இளைஞர்களுக்கு நான் ஒன்று கூற விரும்புகிறேன். இதுவரை உங்களை, தங்களது தேவைகளுக்காக பயன்படுத்தி வந்த பிரிவினைவாத தலைவர்களோ, அவர்களை ஆதரிக்கும் அரசியல்வாதிகளோ அவர்களது குடும்பத்தில் ஒருவரை கூட பயங்கரவாதத் தாக்குதலில் இழக்கவில்லை. சாதாரண மக்களின் வாழ்க்கையை தான் அவர்கள் சீரழித்து வந்தனர்.

உங்களுக்கான சொர்கமாக காஷ்மீரை மாற்றி அமைக்கவே மத்திய அரசு போராடி கொண்டிருக்கிறது. உங்களது காஷ்மீரை டெல்லியின் பொறுப்பில் ஒப்படையுங்கள், பின்பு ஜஹாங்கீர் அரசர் கூறியது போல, காஷ்மீரை சொர்கபூமியாக, நிச்சயமாக நாங்கள் மாற்றி காட்டுகிறோம். 

உங்களது மத நம்பிக்கையை, நாங்கள் யாரும் குற்றம் சொல்லவோ, வேண்டாம் என்று நிராகரிக்கவோ போவதில்லை. உங்களுக்காக போராட மத்திய அரசு இருக்கிறது. உங்களை இருகரம் நீட்டி வரவேற்க இந்திய மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இனியும், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், அவர்களை ஆதரிப்பவர்கள் என்று எவருக்கும் அஞ்சாமல், எங்களுடன் கை கோர்த்து நடக்க தயாராகுங்கள். உங்களுக்கு காஷ்மீர் என்ற சொர்கத்தை கொடுப்பதற்கு நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம்" என்று உரையாற்றியுள்ளார் காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close