நம்முடைய பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய வகை முயற்சிகள் தேவை - பிபின் ராவத் !!

  அபிநயா   | Last Modified : 23 Oct, 2019 09:13 am
globalisation-nationalism-cyber-power-non-state-actors-gen-bipin-rawat-s-take-on-security-in-the-new-age

நிரந்தரமற்ற எண்ணற்ற மாறுதல்களை நாள்தோறும் சந்தித்து வரும் உலகின் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய வகை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இருப்பதாக கூறியுள்ளார் இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத்.

23வது கர்னல் பியாரா லால் நினைவான விரிவுரையில் உரையாடிய, ஊழியர்கள் குழுவின் தலைவரான இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத், "நாள்தோறும் மாற்றங்களை சந்தித்து வரும் உலகில், நாம் நேற்று முக்கியமாக நினைத்த ஒன்று, இன்று முக்கியமற்றதாக காணப்படுகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னோக்கி பயணித்து கொண்டிருக்கும் நாடுகள், அதன் அச்சுறுதல்களையும் அறிந்து, தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய பல மாறுதல்களை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டின் முன்னேற்றங்கள் அனைத்தினாலும் உந்தப்பட்டு, உலக நாடுகளிடையே ஏற்படும் தொடர்புகளும் மாறுதல்களுமே உலகமயமாக்கல். ஆனால், தற்போதைய நிலையில், காலநிலை மாற்றம் உட்பட தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வரை உலகமயமாக்கல் என்பது நிலையற்ற தன்மை உடையதாகவே காணப்படுகின்றது.

சர்வதேச நாடுகள் அனைத்திலும், சமத்துவத்தன்மை என்பது சிறிது கூட இல்லாமல் போய்விட்டது. நல்லதற்காக பயன்படும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட சமூக ஊடகங்கள், வெறுப்பை உமிழ்வதற்காக மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முக்கியமாக, பல சர்வதேச அமைப்புகளில் இருந்தும் அமெரிக்கா வெளியோறி விட்டதை தொடர்ந்து, அதன் போட்டியாளர்களும் அதிகரித்து விட்ட நிலையில், சீனா-அமெரிக்காவின் வர்த்தக போர், அவை இரண்டையும் மட்டும் பாதிக்காமல், பிற நாடுகளையும் வர்த்தகம் மற்றும் பொருளாதார ரீதியாக பாதித்துக் கொண்டிருக்கிறது. 

தொழில்நுட்ப வளர்ச்சியே தற்போதைய உலகின் மிகபெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. தொழில்நுட்பம் வளர வளர, அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருகின்றது. பயங்கரவாத தாக்குதல்களும், அத்துமீறும் ஊடுறுவல்களும் உலகம் முழுவதும் காணப்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தான், வட கொரியா, சிரியா போன்ற நாடுகள் இந்த அச்சுறுதல்களால் பெரும் பாதிப்புகளை நாள்தோறும் சந்தித்து வருகின்றன.

சுமூகமாக பேசி தீர்க்க முடிந்த விஷயம் என்ற ஒன்று தற்போதைய உலகில் இல்லாமல் போய்விட்டது. அமைதியான வழியில் எதையும் சாதிக்க முடிவதில்லை. எல்லை கடந்த பயங்கரவாதிகளும் அவர்களின் ஆதிக்கமும் உலகம் முழுவதும் பரவத்தொடங்கிவிட்டன. 

தேசிய நலன் கருதி இதை ததடுக்கும் முயற்சியில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும். அச்சுறுதல்கள் அதிகரிக்கும் பட்சத்தில், நமது கண்ணோட்டத்தையும் மாற்றியமைத்து புதிய வகை பாதுகாப்பு முயற்சிகளில் நாம் முனைப்புடன் ஈடுபட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close