காஷ்மீர் ஆப்பிள்களில் எழுதப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள்- பயத்தில் காஷ்மீர் மக்கள்!!

  அபிநயா   | Last Modified : 23 Oct, 2019 01:23 pm
apples-from-kashmir-with-messages-i-luv-burhan-wani-azadi-zakir-musa-come-back-reach-jammu

ஜம்மு காஷ்மீரின் வர்த்தகத்தில் முக்கிய பொருளாக கருதப்படும் ஆப்பிள்களில், சமீபகாலமாக, இந்தியாவுக்கு எதிராக சில கருத்துக்கள் எழுதப்பட்டு, சந்தைகளில் விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், பயங்கரவாதிகளின் இந்த செயல்களினால் அச்சமடைந்துள்ளனர் காஷ்மீர் மக்கள்.

ஆப்பிள் ஏற்றுமதிக்கு பெயர் போன மாநிலமான ஜம்மு காஷ்மீரில், கடந்த ஆகஸ்ட் முதல், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வந்ததால், ஏற்றுமதிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது, நிலைமை சீராகி வருவதாக கூறப்பட்டு ஏற்றுமதிகள் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில்,  அங்கு விற்கப்படும் ஆப்பிள்களில் இந்தியாவுக்கு எதிரான சில கருத்துக்கள் எழுதப்பட்டு விற்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

ஆப்பிள் வர்த்தகத்தில் ஈடுபட கூடாது என்று காஷ்மீர் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த பயங்கரவாதிகள், தற்போது அங்கு விற்கப்படும் ஆப்பிள்களில், "இந்தியாவே திரும்ப செல்", "பாகிஸ்தான் பாகிஸ்தான்" "எங்கள் அன்புக்குரியவர் இம்ரான் கான்", என்பது போன்ற மக்களை அச்சுறுத்தும் வாக்கியங்களை எழுதி அனுப்புகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், இந்த வாக்கியங்கள் குறித்து காஷ்மீர் மக்கள் அஞ்ச வேண்டாம் எனவும், இந்திய ராணுவம் மற்றும் போலீசார் அவர்களை பாதுகாக்கும் எனவும் நம்பிக்கை அளித்துள்ளனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close