கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தின் ஊதியத்தை நிராகரித்த முன்னாள் உறுப்பினர் ராமசந்திர குஹா!!

  அபிநயா   | Last Modified : 23 Oct, 2019 03:55 pm
ramachandra-guha-declines-paycheck-for-cricket-stint

இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தின் முன்னாள் உறுப்பினரான ராமசந்திராவிற்கு சேர வேண்டிய ஊதியத்தொகையான 40 லட்சம் ரூபாயை அவரிடம் வழங்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது அந்த ஊதிய பணத்தை நிராகரித்துள்ளார் ராமசந்திர குஹா.

கடந்த 2017 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தால், இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தின் உறுப்பினராக பதவியமர்த்தப்பட்ட ராமசந்திர குஹா, பதிவியேற்ற முதல் நான்கு மாதங்களிலேயே, உறுப்பினர்கள் மத்தியல் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக பதவி விலக்கி விட்டார். இது குறித்து அவரது இராஜினாமா கடிதத்தில், கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களுடன் பல கருத்து வேறுபாடுகள் நிலைத்து வருவதாகவும், அதனால் தனக்கு இந்த பதவி வேண்டாம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து, கிரிக்கெட் வாரியத்தின் புதிய உறுப்பினர்களும், அதன் தலைவராக சௌரவ் கங்குலியும் இன்று பதவியேற்று உள்ளதையடுத்து, முன்னாள் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஊதியங்களை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்நிலையில், கிரிக்கெட் வாரியத்திடமிருந்து தனக்கு கிடைக்கவிருக்கும் ஊதிய பணத்தை நிராகரித்துள்ளார் ராமசந்திர குஹா. 

இவரை தொடர்ந்து, இவருடன் இணைந்து பதவியில் அமர்த்தப்பட்ட விக்கரம் லிம்மாயி என்பவரும் முதல் 5 மாதங்களிலேயே பதவி விலகிய நிலையில், அவரும் தனக்கு சேர வேண்டிய ஊதியத்தொகையான 50 லட்சம் ரூபாயை ஏற்பது குறித்த தனது முடிவை சில நாட்களில் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close