இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை இல்லை - அசாம் மாநில அரசு அதிரடி!!

  அபிநயா   | Last Modified : 23 Oct, 2019 05:29 pm
two-child-policy-in-indian-states

இந்தியாவின் மக்கள் தொகையை குறைக்கும் நோக்கத்தில், வரும் 2021 ஆம் ஆண்டு முதல், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், அரசு வேலை இல்லை என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது அசாம் மாநில அரசு.

இந்தியாவின் மக்கள் தொகை 1.37 பில்லியன் அளவை எட்டியுள்ள நிலையில், அதனை குறைக்கும் நோக்கத்துடன், அசாம் மாநில அரசின் தற்போதைய முடிவை, இந்தியாவின் பல மாநிலங்களும் பல ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றன. 

ராஜஸ்தான் 1994ஆம் ஆண்டு முதலும், மத்திய பிரதேசம் 2001 முதலும், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்கள் 2005 ஆம் ஆண்டு முதலும் இத்தகைய சட்டத்தை பிறப்பித்து அதனை பின்பற்றி வருகின்றன.

கடந்த 1994 ஆம் ஆண்டு, தெலுங்கானா மற்றும் ஆந்திரபிரதேச மாநிலங்களில், மே 30, 1994 ஆண்டிற்கு பின்னர் குழந்தை பெறும் பெற்றோர்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், அவர்கள் தேர்தலில் போட்டியிட இயலாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவற்றிலிருந்து சற்று மாறுபட்டு, இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தாலும், அவர்களது வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்றால் அவர்கள் தேர்தலில் போட்டியிட இயலாது என்ற சட்டத்தை கடந்த 2003ஆம் ஆண்டு முதல் கர்நாடக மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close