காஷ்மீரிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது அன்சர் கஸ்வாத் உல் ஹிந்த் பயங்கரவாத அமைப்பு - தில்பாக் சிங் பேட்டி!!

  அபிநயா   | Last Modified : 23 Oct, 2019 09:15 pm
al-qaeda-s-offshoot-wiped-out-from-kashmir-valley-j-k-police-chief

காஷ்மீர் பகுதியில் பதுங்கியிருந்த அன்சர் கஸ்வாத் உல் ஹிந்த் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள், முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார் அம்மாநில போலீஸ் ஜெனரல் தில்பாக் சிங்.

இந்திய எல்லை பகுதியான காஷ்மீரில், கடந்த ஆகஸ்ட் முதல், பயங்கரவாத தாக்குதல்களும், அத்துமீறல்களும் அதிகரித்து வந்த நிலையில், மறு தாக்குதலில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர், நேற்று (செவ்வாயிகிழமை) அன்சர் கஸ்வாத் உல் ஹிந்த் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மூவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த காஷ்மீர் மாநில போலீஸ் ஜெனரல் தில்பாக் சிங், உயிரிழந்துள்ள பயங்கரவாதிகள் அனைவரும், அன்சர் கஸ்வாத் உல் ஹிந்த் அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும், கடந்த சில மாதங்களாக பதுங்கியிருந்து தாக்குதல் மேற்கொண்டிருந்த அவர்களை, மறு தாக்குதலில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் சுற்றுக் கொன்றதாகவும் கூறினார்.

மேலும், காஷ்மீர் பகுதியில் பதுங்கியிருந்த அன்சர் கஸ்வாத் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அனைவரையும், இந்திய ராணுவம் கொன்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்கள் முன்பு, பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு, அன்சர் கஸ்வாத் உல் ஹிந்த் அமைப்புடன் இணைந்து, இந்தியாவை தாக்க திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close