இணையவிருக்கும் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்!!!

  அபிநயா   | Last Modified : 23 Oct, 2019 09:15 pm
bsnl-mtnl-to-merge-cabinet-announces-rs-29-937-crore-revival-package

கடந்த சில நிதி ஆண்டுகளாக, பெரும் இழப்பை சந்தித்து வரும் நிறுவனங்களான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் மற்றும் மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட் இரண்டையும் இணைக்கப்போவதாக அறிவித்துள்ளார் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.

தனியார் நிறுவனங்கள் அடைந்து வரும் வளர்ச்சி காரணமாக, கடந்த சில நிதி ஆண்டுகளாக, இழப்புகளை சந்தித்து வரும் நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் இரண்டையும் இணைக்கப்போவதாக மத்திய அமைச்சரகம் இன்று முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து, நஷ்டங்களை சந்தித்து வரும் இந்த நிறுவனங்களை புதுபிக்கும் வகையில், 29,937 கோடி ரூபாய் வழங்கபோவதாகவும் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த இணைப்புக்கான பணிகள் முழுமை பெறும் வரை, மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட் , பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் இயங்கப்படும் என்றும், ஊழியர்களின் நிலை அறிந்து, அவர்களுக்கு தன்னார்வ ஓய்வு பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட உள்ளதாக ரவி சங்கர் கூறியுள்ளார். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close