சௌரவ் கங்குலி தலைமையில் ஆன புதிய கிரிக்கெட் வாரியம்!!

  அபிநயா   | Last Modified : 24 Oct, 2019 10:50 am
from-president-sourav-ganguly-to-secretary-jay-shah-all-you-need-to-know-about-bcci-s-new-staff

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி நேற்று பதவியேற்றுள்ளதை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் குழுவை சிறப்பாக வழிநடத்திய இவர், கிரிக்கெட் வாரிய தலைவராகவும் சிறப்பான முறையில் பணியாற்றுவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 39வது தலைவராக நேற்று (புதன்கிழமை) பதவியேற்ற கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலிக்கு தனது முழு அதரவு எப்போதும் இருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

இவரை தொடர்ந்து, கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பதவியேற்றுள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு முதல், குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் துணை தலைவராக பணியாற்றி வந்துள்ளார். 

இந்த இருவரை தொடர்ந்து, துணை தலைவராக மஹிமா வர்மாவும், பொருளாளராக அருண் சிங்கும், துணை தலைவராக ஜெயேஷ் ஜார்ஜ் ஆகியோரும் பதவியேற்றுள்ளனர்.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close