பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் - உ.பி., முதலிடம்!!

  அபிநயா   | Last Modified : 24 Oct, 2019 01:31 pm
up-govt-s-defence-on-crimes-against-women

தேசிய குற்ற ஆவண காப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள "குற்றங்கள் 2017" என்ற பட்டியலில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளில், உத்திரப்பிரதேச மாநிலம் முன்னிலை வகுக்கின்ற நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அம்மாநில துணை போலீஸ் அதிகாரி பி.வி.ராமசாஸ்திரி.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையில், இந்தியாவில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளில், உத்திரப்பிரதேச மாநிலம், முன்னிலை வகிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவில் மொத்தம் 30,62,579 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் 3,10,084 வழக்குகள் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக இந்த அறிக்கையின் தகவல்கள் தெரிவிக்கின்றன..

கடந்த 2017ஆம் ஆண்டின் படி, இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, உத்திரப்பிரதேச மாநிலம், வழிப்பறி குற்றங்களில் 26வது இடத்திலும், கொலை வழக்குகளில் 22வது இடத்திவும், திருட்டு வழக்குகளில் 31வது இடத்திலும், பலாத்கார வழக்குகளில் 22வது இடத்திலும் உள்ளது. 

இதனை தொடர்ந்து, இந்த வன்முறைகளை குறைப்பதற்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் துணை செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அவரை கடுமையாக குற்றம் சாட்டி பதிவிட்டிருந்தார். 

பிரியங்கா காந்தியின் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், கடந்த 2016 ஆம் ஆண்டை விட தற்போது உத்திரப்பிரதேச மாநிலத்தில் குற்றங்கள் குறைக்கப்பட்டிருப்பதாகவும், தற்போதைய அரசு குற்றங்களை குறைப்பதற்காக பல வழிகளில் முயன்று வருவதாகவும், அம்மாநில துணை போலீஸ் அதிகாரி பி.வி.ராமசாஸ்திரி கூறியுள்ளார்.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close