காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் - 310 வாக்குச் சாவடிகள், 1065 வேட்பாளர்கள்!!

  அபிநயா   | Last Modified : 24 Oct, 2019 02:03 pm
jammu-and-kashmir-local-body-elections

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, இன்று அம்மாநிலத்தில் முதல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டிருப்பதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் இன்று முதல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இதுவரை, ராஜௌரி தொகுதியில் 62.93 சதவீத வாக்குகளும், உதாம்பூரில் 50.39 சதவீத வாக்குகளும், ரீசையில் 53.88 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

310 வாக்குச் சாவடிகளில் நடைபெறும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் 1065 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேலும், இந்த தேர்தலுக்கான முடிவுகள், இன்று மாலை அறிவிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close