ஜம்மு காஷ்மீர் மாநில குல்காம் நகரில், மீண்டும் பயங்கரவாதிகள், தாக்குதல்கள் மேற்கொண்டிருந்ததை தொடர்ந்து, இந்திய ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
காஷ்மீர் மாநில எல்லை பகுதியில், கடந்த சில மாதங்களாக, பயங்கரவாத தாக்குதல்களும், அத்துமீறல்களும் அதிகரித்து வருவதை தொடர்ந்து, மறு தாக்குதலில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர், கடந்த செவ்வாய்கிழமை அன்று, அன்சர் கஸ்வாத் உல் ஹிந்த் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மூவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.
இதை தொடர்ந்து, நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த காஷ்மீர் மாநில போலீஸ் ஜெனரல் தில்பாக் சிங், காஷ்மீர் பகுதியில் பதுங்கியிருந்த அன்சர் கஸ்வாத் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அனைத்து பயங்கரவாதிகளையும், இந்திய ராணுவம் கொன்று விட்டதாக குறிப்பிட்டிருந்த நிலையில், குல்காம் நகரில், மீண்டும் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது அம்மாநில மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Newstm.in