ஆப்பிள் ஏற்றிச் சென்ற 2 லாரி ஓட்டுநர்கள் கொலை: காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீண்டும் அட்டூழியம்!!!

  அபிநயா   | Last Modified : 25 Oct, 2019 06:30 pm
two-truck-drivers-shot-dead-by-terrorists-in-shopian-third-incident-in-10-days

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கடந்த 10 நாட்களில், மூன்றாவது முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ள பயங்கரவாத தாக்குகலினால், மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் எல்லை பகுதியான ஜம்மு காஷ்மீரில், கடந்த சில மாதங்களாக, பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொள்ள முயல்வதும், அதற்கு பதிலடி கொடுக்க, இந்திய ராணுவம் மறுதாக்குதலில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காஷ்மீரின் ஷோப்பியன் பகுதியில், நேற்று (வியாழன்) மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலினால், டிரக் ஓட்டுனர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்த இருவரில், ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முஹமது இலியாஸ் என்பதும், மற்றொருவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜீவன் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆப்பிள் ஏற்றுமதிக்காக காஷ்மீர் வந்தடைந்த இருவரும், பாதுகாப்பு அதிகாரிகளின் அனுமதி மறுக்கப்பட்ட பகுதி வழியே சென்றதை தொடர்ந்தே, பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டிருப்பதாக அம்மாநில போலீசார் கூறிகின்றனர்.

இவ்விருவரை தொடர்ந்து, இந்த தாக்குதலினால் காயமடைந்த மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் குறித்த விசாரணையில் தற்போது ஈடுபட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த 10 நாட்களுக்குள், காஷ்மீர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மூன்றாவது தாக்குதல் இது என செய்திகள் கூறுகின்றன.

இதனிடையில், காஷ்மீர் பகுதியில் பதுங்கியிருந்த அன்சர் கஸ்வாத் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அனைத்து பயங்கரவாதிகளையும், இந்திய ராணுவம் கொன்று விட்டதாக ராணுவ அதிகாரி தில்பாக் சிங் கூறியிருந்ததை தொடர்ந்து, இரண்டாவது நாளாக மீண்டும் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த தாக்குதலினால் அதிர்ச்சியில் உள்ளனர் அம்மாநில மக்கள்.

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close