சாவர்க்கர் அப்பாவி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை - உளறிக்கொட்டிய துஷார் காந்தி!!

  அபிநயா   | Last Modified : 25 Oct, 2019 08:57 pm
court-did-not-pronounce-savarkar-innocent-tushar-gandhi

மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றி பெற்றால், இந்திய விடுதலைக்காக போராடிய, வீர் சாவர்க்கருக்கு பாரத் ரத்னா வழங்கப்படும் என்ற வாக்குறுதியை பாஜக முன்வைத்திருந்ததை தொடர்ந்து, மஹாத்மா காந்தி வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை எனினும், அவரை அப்பாவி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை என்று உளறிக்கொட்டியுள்ளார் காந்தியின் பேரனான துஷார் காந்தி.

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது, பாஜக வெற்றி பெற்றால் வீர் சாவர்க்கருக்கு இந்தியாவின் மிகச்சிறந்த விருதான பாரத் ரத்னா வழங்கப்படும் என்ற வாக்குறுதியை முன்வைத்திருந்தது பாஜக. இதை தொடர்ந்து, தற்போது தேர்தலில் வெற்றிபெற்றிருக்கும் பாரதிய ஜனதா கட்சி அதற்கான வேலைகளை தொடங்கவுள்ள நிலையில், அவர்களின் அந்த முடிவிற்கு தன் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார் துஷார் காந்தி. 

"இந்திய விடுதலைக்காக அயராது போராடிய சாவர்க்கர், மஹாத்மா காந்தியின் அரசியல் வழிமுறைகளை கடுமையாக விமர்சித்தவர். அது மட்டுமின்றி மஹாத்மாவின் கொலை வழக்கில் குற்றவாளியாக கருதப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்படவில்லை என்றாலும், நீதிமன்றம் அவரை அப்பாவி எனக் கூறி விடுதலை செய்யவில்லை. இவரை குற்றவாளி என்று நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் தான் விடுதலை செய்தது. இந்நிலையில், சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குவதில் எனக்கு சிறிதும் விருப்பம் இல்லை" என்று துஷார் காந்தி உளறிக் கொட்டியுள்ளார் 

மேலும், வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்ற பாஜகவின் வாக்குறுதிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியிலிருந்து பல எதிர்ப்பு குரல்கள் எழும்பியிருந்த நிலையிலும், அவர் இந்திய விடுதலைக்காக கடுமையாக போராடியவர் என்ற உண்மையை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும் என்ற நிலைக்கு தற்போது இறங்கி வந்துள்ளனர் காங்கிரஸ் கட்சியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close