பாகிஸ்தான் அரசுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!!

  அபிநயா   | Last Modified : 25 Oct, 2019 10:05 pm
rajnath-singh-warns-pakistan-government

இந்தியாவின் உள்நாட்டு விவகாரமான ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் தொடர்ந்து மூக்கை நுழைத்து வரும் பாகிஸ்தான், அப்பகுதியில் அதன் அத்துமீறல் ஊடுறுவல்களையும் அதிகரித்துள்ளது. இதனால் கோபமுற்ற மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடுமையான முறையில் பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.

"இனி காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் இந்தியாவுடன் உரையாட வேண்டுமென்றால் அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை குறித்ததாக மட்டும் தான் இருக்க வேண்டும். இந்தியாவுடன் போரிட்டு காஷ்மீரை கைப்பற்றும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்க முடிவு செய்தால், தற்போது ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதியையும் அவர்கள் இழக்க நேரிடும்" என்று பாகிஸ்தானை எச்சரித்துள்ளார் ராஜ்நாத் சிங்.

இவரை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று இந்தியாவுடன் இணைத்தது போல, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் ஓர் நாள் நம் வசமாகும் என்று பாகிஸ்தானுக்கு எதிரான தன் கருத்தை முன் வைத்துள்ளார் சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவுத்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close