பெங்களூரில் சட்டவிரோதமாக குடியேறிய 30 பேர் கைது - கர்நாடக அரசு அதிரடி!!

  அபிநயா   | Last Modified : 26 Oct, 2019 02:49 pm
police-arrest-30-illegal-bangladeshi-immigrants-initiate-deportation-process

தேசிய விசாரணை அமைப்பின் அறிவுறுத்தலின் படி, பெங்களூர் நகரில் அனுமதியில்லாமல் வசித்து வரும் அனைத்து வங்கதேச மக்களையும் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அம்மாநில அரசு,  தற்போது, அங்கு சட்டவிரோதமாக குடியேறி வாழ்ந்து வரும் 30 வங்கதேச மக்களை கைது செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

கர்நாடக மாநிலம் பெங்களூரில், "ஸ்லீப்பர் செல்ஸ்" எனப்படும் பயங்கரவாதிகள் பலரும் மறைந்து வாழ்ந்து வருவதினால், அனுமதியில்லாமல் வசித்து வரும் அனைத்து வங்கதேச மக்களையும் வெளியேற்றும் படி தேசிய விசாரணை அமைப்பின் தலைவர் மோடி உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, அங்கு சட்டவிரோதமாக குடியேறி வாழ்ந்து வரும் வங்கதேச மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அம்மாநில அரசு, தற்போது 30 பேரை கைது செய்துள்ளது.

இது குறித்து கூறிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் கணேஷ் கார்னிக், "அனுமதியில்லாமல் வசித்து வரும் மக்களை கைது செய்து சிறையில் அடைக்கும் உரிமை எந்த அரசுக்கும் இல்லை. அவர்களை நாடுகடத்தலாம் என்றால், எந்த அரசும் அவர்களை ஏற்க தயாராக இருக்காது. இந்நிலையில், அவர்களை நம் நாட்டிலேயே பாதுகாப்பான காவலில் வைப்பதே இதற்கு ஒரே தீர்வாகும்" என்று கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து, ஸ்லீப்பர் செல்களை கண்டுபிடிக்கும் நோக்கத்துடன், "பயங்கரவாத எதிர்ப்புப் படை" உருவாக்கப்படவுள்ளதாகவும், வரும் நவம்பர் 1 முதல் அவர்களது பணி தொடங்கும் எனவும் கூறியுள்ளார் அம்மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மாயி.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்தை தொடர்ந்து, அசாம் மாநிலத்தை போலவே, கர்நாடக மாநிலத்திலும் தேசிய குடியரிமை பட்டியல் கொண்டுவர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close