பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு பாரத் ரத்னா - மணீஷ் திவாரி கோரிக்கை!!

  அபிநயா   | Last Modified : 26 Oct, 2019 05:41 pm
confer-bharat-ratna-to-bhagat-singh-rajguru-sukhdev-manish-tewari-to-pm-modi

இந்திய விடுதலைக்காக போராடிய, வீர் சாவர்க்கருக்கு பாரத் ரத்னா வழங்கப்படும் என்ற வாக்குறுதியை பாஜக முன்வைத்திருந்ததை தொடர்ந்து, பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மணீஷ் திவாரி.

இந்திய விடுதலை போராட்டத்தின் போது, விடுதலை போராளியான லாலா லஜ்பத் ராய், ஆங்கிலேய காவல்துறை அதிகாரியான சான்டர்ஸ் மற்றும் துணை அதிகாரிகளால் அடித்துக் கொள்ளப்பட்டார். அதற்கு பழி வாங்கும் நோக்கத்துடன், பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவரும் சான்டர்ஸ்-ஐ கொலை செய்த காரணத்திற்காக கடந்த மார்ச் 23,1931 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டனர்.

இதை தொடர்ந்து, இந்திய விடுதலைக்காக அயராது போராடி, தேசியவாதம் எனப்படும் அளப்பரிய எண்ணத்தை மக்களுக்குள் விதைத்த பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகிய மூவருக்கும், இந்தியாவின் மிகச்சிறந்த விருதான பாரத ரத்னா வழங்கி பெருமை படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்.பி., மணீஷ் திவாரி.

இவருக்கு முன்னரே, ஏஐஎம்ஐஎம் அமைப்பின் தலைவர் அசாதுதின் ஒவாய்ஸி, இவர்கள் மூவருக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close