வலுவடைந்த கியார் புயல் - மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

  அபிநயா   | Last Modified : 26 Oct, 2019 06:25 pm
maharashtra-karnataka-brace-for-strong-winds-rains-as-kyarr-intensifies-into-severe-cyclonic-storm

அரபிக்கடலில் உருவாகியிருந்த "கியார்" புயல் தற்போது மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அரபிக்கடலின் மத்திய கிழக்கு பகுதியில் உருவாகியிருந்த "கியார்" புயல், இன்று மேலும் வலுவடைந்ததை தொடர்ந்து, மகாராஷ்டிரா, கர்நாடக, கேரளா, கோவா போன்ற மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

வட-மேற்கு நோக்கி நகர்ந்து வரும் கியார் புயலால், கடல் அலைகளின் சீற்றம் அதிகரித்து காணப்படும் நிலையில்,  இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வரும் அக்டோபர் 28 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிக்குள் இந்த கியார் புயல், மேற்கு-வடமேற்கு திசைகளில் ஓமன் நாட்டை நோக்கி நகரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close