காஷ்மீரில் தாக்குதல் மேற்கொள்ளும் பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் பதிலளிக்கும் - ராம் மாதவ் உறுதி!!

  அபிநயா   | Last Modified : 26 Oct, 2019 07:25 pm
terrorists-only-harming-locals-of-kashmir-by-attacking-truck-drivers-bjp-s-ram-madhav

காஷ்மீரின் ஷோப்பியன் பகுதியில், கடந்த வியாழன் அன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலினால், டிரக் ஓட்டுனர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து, காஷ்மீர் மக்களின் விருப்பங்களை அழிக்க முயலும் பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் பதிலளிக்கும் என்று உறுதி அளித்துள்ளார் ராம் மாதவ்.

ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில், கடந்த சில மாதங்களாக, பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொள்ள முயன்று வருவதும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் மறுதாக்குதலில் ஈடுபட்டு வருவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையில், சமீபத்தில், காஷ்மீரின் ஷோப்பியன் பகுதியில், கடந்த வியாழனன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த டிரக் ஓட்டுனர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

இதை தொடர்ந்து, காஷ்மீர் மாநில ஏற்றுமதியாளர்கள் அல்லாது பிற மாநில ஏற்றுமதியாளர்களை தாக்கும் பயங்கரவாதிகள் காஷ்மீர் மக்களின் விருப்பங்களை அழிக்க முயல்வதாகவும், அவர்களின் இந்த செயல்களுக்கு இந்திய ராணுவம் நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்றும் உறுதி அளித்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் துணை செயலாளர் ராம் மாதவ்.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close