ஷோப்பியன் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இலியாஸ் கான் குடும்பத்திற்கு ராஜஸ்தான் மாநில அரசு இரங்கல்!!

  அபிநயா   | Last Modified : 26 Oct, 2019 08:08 pm
shopian-terrorist-attack-sachin-pilot-worries-for-khan

ஜம்மு காஷ்மீரின் ஷோப்பியன் பகுதியில், மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், உயிரிழந்த ராஜஸ்தான் மாநில டிரக் ஓட்டுனர் முஹமது இலியாஸ் கானின் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் சச்சின் பைலட்.

ஜம்மு காஷ்மீரின் ஷோப்பியன் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநில டிரக் ஓட்டுனர்கள் இரண்டு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில டிரக் ஓட்டுனர் முஹமது இலியாஸ் கான், ராணுவர்களுக்கு பால் மற்றும் உணவு பொருட்கள் எடுத்துச் செல்பவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த இலியாஸ் கான் குடும்பத்திற்கு தன் இரங்கலை தெரிவித்த ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், மேலும் இதுபோன்ற துயர சம்பவங்கள் நேராமல் பார்த்துக் கொள்ளுமாறு காஷ்மீர் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை தொடர்ந்து, உயிரிழந்த முஹமது இலியாஸ் கானின் இழப்பிற்கு நஷ்ட ஈடும், அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு உத்யோகமும் வழங்குமாறு ராஜஸ்தான் அரசிடம் கோரிக்கை முன் வைத்துள்ளார் அவரது சகோதரர் ரிஹமத்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close