மூத்த குடிமக்கள் வருமானவரி விகிதத்தை எவ்வாறு குறைக்கலாம் என தெரிந்து கொள்வோமா??

  அபிநயா   | Last Modified : 26 Oct, 2019 09:02 pm
tax-planning-for-senior-citizens-know-how-you-can-save-more-on-taxes

இந்தியாவில் 60 வயது கடந்தவர்கள் மூத்த குடிமக்கள் பட்டியலில் வைக்கப்படும் நிலையில், அவர்களுக்கான இந்த ஆண்டின் வருமானவரி விலக்குகளை வெளியிட்டுள்ளது வருமான வரித்துறை.

இந்தியாவை பொறுத்தவரை, வருமானவரி விகிதத்தில், மூத்த குடிமக்களுக்கு எப்போதுமே சிறப்பு சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களது வைப்பு தொகைகளுக்கான வட்டி விகிதம் அதிகப்படியாக அளிக்கப்படும் நிலையில், வருமானவரி விகிதத்தில் அளிக்கப்படும் சலுகைகளை அறிவது, அவர்களது வருமானவரியில் சேமிப்புகள் மேற்கொள்ள உதவும்.

1. மூத்த குடிமக்கள் இல்லாத சராசரி இந்தியர்களுக்கான அதிக விலக்கு வரம்பு 2.5 லட்சம் ரூபாயாக உள்ள நிலையில், மூத்த குடிமக்களுக்கு 3 லட்சம் ரூபாயாகவும், 80 வயதை கடந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2. சராசரி இந்தியர்களுக்கு அளிக்கப்படும்  வைப்பு தொகைகளுக்கான வட்டியில் 10,000 ரூபாய் வரை வருமான வரி விலக்கு உள்ள நிலையில் மூத்த குடிமக்களின் வைப்பு தொகைகளுக்கு 50,000 ரூபாய் வரை வருமான வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

3. ஓர் குறிப்பிட்ட வருமானத்தில் இருந்து அவ்வபோது கழிக்கப்படும் வட்டி மூல வரி எனப்படும். வருமான வரி சட்டம் 1961 இன் படி, மூத்த குடிமக்களின் வைப்பு தொகைகளுக்கு கிடைக்கபெறும் வட்டி ரூ.50,000 மேல் இருக்குமாயின், அவர்களுக்கு மூலத்திற்கான வரி விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

4. வருமான வரி சட்டம் 80டி பிரிவின் படி, மூத்த குடிமக்களுக்கான மருத்துவ செலவு ரூ.50,000 வரை இருக்கும் நிலையில், அவர்களுக்கு அந்த ஆண்டிற்கான மருத்துவ காப்பீடு வரி விலக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5. வருமான வரி சட்டம் 208 இன் கீழ், நாட்டில் வசிக்கும் அனைவரும், தாங்கள் பெறும் வருமானத்திற்கான வரியை அவ்வப்போது செலுத்தி விட வேண்டும் என்பது விதி. ஆனால், வருமான வரி சட்டம் 207 இன் கீழ், மூத்த குடிமக்களாக கருதப்படுபவர்கள், தொழில் முறையில் கிடைக்கும் லாபங்கள் தவிர மற்ற வருமானங்களுக்கு வரி ரிட்டர்ன் கட்ட தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close