அயோத்தியில் தீப உத்சவம் - பல மாநிலங்களிலிருந்தும் குவியும் கலைஞர்கள்!!

  அபிநயா   | Last Modified : 26 Oct, 2019 09:38 pm
deepotsav-artists-from-different-states-gather-in-ayodhya

அயோத்தியாவில் தீப உத்சவ திருவிழா கொண்டாடப்பட உள்ளதை தொடர்ந்து, அதில் கலந்து கொள்ள, இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் பல கலைஞர்கள் அயோத்தியா வந்தடைந்துள்ளனர்.

அயோத்தியாவிற்கு வருகை புரிந்துள்ள மத்தியபிரதேச மாநிலம் நாபன்நகரை சேர்ந்த முகேஷ் தர்பார் கூறுகையில், "தீப உத்சவ திருவிழாவில் கலந்து கொள்வது பெருமையாக உள்ளது. நாங்கள் இங்கு பகோரியா என்ற கிராமிய நடனமாட வந்துள்ளோம்" என்று கூறினார்.

உத்திரபிரதேச மாநில அயோத்தியாவில் முன்றாவது முறையாக கொண்டாடப்படும் தீப உத்சவத்திற்காக 5,51,000 லட்சம் தீபங்கள் ஏற்றவிருப்பதாகவும், சரயு நதிக்கரை வண்ண விளக்குகளால் ஜொலிப்பதை காண மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

அயோத்தியாவின் தீப உத்சவத்தை காண உலகின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close