காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவளிக்கும் காஷ்மீரி பண்டிதர்கள்!!

  அபிநயா   | Last Modified : 27 Oct, 2019 12:54 pm
kashmir-pandits-backing-for-the-abrogation-of-article-370-filed-plea-in-sc

காஷ்மீர் பண்டிதர்கள் இருவர், ஜம்மு காஷ்மிரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்ற மத்திய அரசின் உத்தரவிற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்டு மாதம், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, காஷ்மீர் பண்டிதர்களான தேஜ் குமார் மோசா மற்றும் கரிஷ்மா தேஜ் குமார் மோசா இருவரும், மத்திய அரசின் இந்த கருத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.  

இது குறித்து கூறிய பண்டிட்டுகள் இருவரும், "முன்பு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட போதும், நிலையற்ற ஒன்றாக தான் கையெழுத்திடப்பட்டது. அப்போதிலிருந்தே இந்தியாவின் ஓர் பகுதிதான் காஷ்மீர். எனவே, மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கதக்க ஒன்றுதான்" என்று கூறியுள்ளனர்.

பண்டிதர்களை தொடர்ந்து, பலரும் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த மனுக்கள் குறித்த விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு வரும் நவம்பர் 14 அன்று விசாரிக்க உள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close